Pages

Saturday, 31 March 2012

ஜில் ஜில் கூல் வாட்டர் வேண்டாமே!




 # இப்போதெல்லாம் கிராமத்திலும்,நகர்புறங்களிலும் `பிரிட்ஜ்’ பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அதனால், குளிர்ச்சியான தண்ணீர் குடிப்போரின் எண்ணிக்கையும் உயர்ந்துவிட்டது. காலை உணவானாலும் சரி, இரவு உணவானாலும் சரி இந்த குளிர்ச்சியான தண்ணீர்தான் பலரது தாகத்தை தணிக்கிறது.

 # இது மிகவும் ஆபத்தான செயல் என்று எச்சரிக்கிறார்கள் டாக்டர்கள். அவர்கள் தரும் விளக்கம் இதுதான்`சாப்பிட்டு முடித்தவுடன் குளிர்ச்சியான தண்ணீரை குடித்தால், அது நாம் சாப்பிட்ட உணவில் உள்ள எண்ணெய்த் துகள்களை கெட்டியாக்கி விடுகிறது.

# இதனால், சாப்பிட்ட உணவு செரிமானம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, உடலில் இருக்கும் கொழுப்பின் அளவு அதிகரிக்கவும் அது காரணமாகி விடுகிறது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இதயம், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகள் வரலாம்’ என்று எச்சரிக்கிறார்கள் டாக்டர்கள்.

# இதய நோயாளிகள் சாப்பிடும்போது கூல் வாட்டரை தொடவேக் கூடாது என்றும் அவர்கள் அறிவுறுத்துகிறார்கள். டாக்டர்களின் இந்த எச்சரிக்கை உண்மைதானா? என்பதை நீங்களே ஆய்வு செய்து நிரூபித்துக் கொள்ளலாம். நீங்கள் அடிக்கடி அல்வா சாப்பிடும் பழக்கம் உள்ளவர் என்றால், அதில் சிறு பகுதியை எடுத்து அப்படியே பிரிட்ஜில் வைத்து விடுங்கள்.

# சில மணி நேரம் கழித்து அதை எடுத்துப் பாருங்கள். அல்வா கெட்டியாகி இருக்கும். ஏற்கனவே அதில் இருந்த எண்ணெய்ப் பசை சுத்தமாக காணாமல் போய் இருப்பது போன்று தோன்றும். ஆனால், அந்த எண்ணெய் அல்வாவில் அப்படியே ஆங்காங்கே படிந்து திண்ணமாக வெள்ளை நிறத்தில் மாறியிருக்கும்.

# உங்கள் விரலை அதில் வைத்தால் உடனே அது உருகிவிடும். சாப்பிட்டு முடித்ததும், நம் உடலுக்குள் ஐஸ் வாட்டர் சென்றால், எண்ணெய்த் துகள்கள் இதுபோன்றுதான் மாறி சிக்கலை ஏற்படுத்தி விடுகின்றன. இனி கூல் வாட்டரை பயன்படுத்த யோசிப்பீங்க தானே?

by: Giving Hands Together