Pages

Sunday, 1 April 2012

உலகிலேயே பணக்கார கிராமம்


 உலகிலேயே பணக்கார கிராமமாக சீனாவின் ஹுவாக்ஸி வளர்ந்து உள்ளது. இக்கிராமத்தின் மொத்த பரப்பளவு ஒரு சதுர கிலோமீட்டர் மட்டுமே. இதனை தற்போது மாதிரி சோசலிஷ கிராமமாக அழைக்கின்றனர்.  இந்த கிராமம் இவ்வளர்ச்சியை அடைய வித்திட்டவர் வு. ரென்பா  என்பவர் ஆவார். இவரின் வழிகாட்டுதலாலும், மக்களின் கடின உழைப்பாலும் ஹுவாக்ஸி பணக்கார அந்தஸ்தை பெற்றுள்ளது. எழை விவசாய சமூகம் தான் இன்று பெரும் பணக்கார சமூகமாக வளர்ந்துள்ளது.






இங்குள்ள 328 அடி உயரமுள்ள 60 மாடி கட்டிடம், பெய்ஜிங்கில் உள்ள அதிக உயரமான கட்டிடத்துக்கு இணையானது.  இந்த கட்டிடத்தின் உச்சி தளத்தில் உள்ள பசு சிற்பம் ஆயிரம் கிலோ தங்கத்தாலானாது. மற்ற தளங்களில் வெள்ளியால் ஆன பெரிய பெரிய விலங்குகளின் அழகிய சிற்பங்கள் உள்ளன.  தங்க இழைகள் அங்குள்ள மார்பில் தரையில் ஜொலிக்கும். இந்த கட்டிடம் புதுக்கிராம கோபுரம் என்று அழைக்கப்படுகின்றது.



இக்கிராமத்தின் தெருக்களில் மகா மாளிகைகள் உயர்ந்து நிற்கின்றன. ஒவ்வொரு மாளிகையின் முன்பும் பி.ம்.டபிள்யு கார்கள் உள்ளன.






 

1998 ஆம் ஆண்டில் பங்கு சந்தையில் இறங்கிய ஹுவாக்ஸி, இன்று உலகம் முழுவதும் 40க்கும் மேற்ப்பட்ட நாடுகளுக்கு இக்கிராமத்தின் பொருட்களை எற்றுமதி செய்கிறது


பணச்செழுமை சுற்றுலா என்ற பெயரில் ஹுவாக்ஸிக்கு வரும்  சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஒரு ஆண்டிற்கு 2 இலட்சம். இதன்முலமும் இக்கிராமத்திற்கு பணம் கொட்டுகிறது. " லோங்ஸி " என்ற 2000 பேர் ஒரே நேரத்தில் தங்க வசதியுள்ள சர்வதேச தரத்திலான ஹோட்டலும் இங்கு உள்ளது.

இவர்களின் வளர்ச்சிக்கு காரணங்கள்

# பாரம்பரிய விவசாயத்தில் நவீனத்தை புகுத்தி வெற்றி கண்டுள்ளனர்.
# அதில் பெற்ற அதிகப்படியான வருவாயை ஜவுளி, உருக்கு தொழிலில் முதலீடு செய்தனர்.
# கடுமையான உழைப்பு அதுவும் ஒற்றுமையுடன் செயல்பட்டது.